இராணுவ டிரக் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து - மூவர் பலி

கிளிநொச்சி, பளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (08) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ டிரக் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ டிரக் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து - மூவர் பலி இராணுவ டிரக் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து - மூவர் பலி Reviewed by Vanni Express News on 1/08/2019 10:47:00 PM Rating: 5