லக்ஷபான பிரதான வீதியில் வாகன விபத்து

-க.கிஷாந்தன்

கினிகத்தேனை களுகல - லக்ஷபான பிரதான வீதியில், கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில் வைத்து கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்துள்ளதால் அவ்வீதி வழியான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மாற்று வழியை பயன்படுத்துமாறும்  கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து பொல்பிட்டிய புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வீதியில் வளைவு பகுதியில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் சாரதிக்கும், உதவியாளருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
லக்ஷபான பிரதான வீதியில் வாகன விபத்து லக்ஷபான பிரதான வீதியில் வாகன விபத்து Reviewed by Vanni Express News on 1/09/2019 03:29:00 PM Rating: 5