புத்தளம் வனாத்திவில்லு பகுதியில் 100 கிலோ கிராம் வெடிபொருட்கள் வைத்திருந்த 4 பேர் கைது

வனாத்தவில்லு, மங்களபுர, கரடிபுவல் பிரதேச தென்னை மர தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்கள் மற்றும் இரசாயன பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

இன்று (17) மாலை குறித்த வெடிபொருட்கள் மற்றும் இரசாயன பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

புத்தளம், வனாத்திவில்லு பகுதியில் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் சுமார் 100 கிலோ கிராம் எடையுடையவை என தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் 100 டெட்டனேட்டர்களும் இரசாயன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
புத்தளம் வனாத்திவில்லு பகுதியில் 100 கிலோ கிராம் வெடிபொருட்கள் வைத்திருந்த 4 பேர் கைது புத்தளம் வனாத்திவில்லு பகுதியில் 100 கிலோ கிராம் வெடிபொருட்கள் வைத்திருந்த 4 பேர் கைது Reviewed by Vanni Express News on 1/17/2019 11:40:00 PM Rating: 5