ஆமை இறைச்சி மற்றும் 211 ஆமை முட்டைகளுடன் இரு பெண்கள் கைது

ஆனவிலுந்தாவ - தல்லதரன்கட்டுவ பிரதேசத்தில் ஆமை இறைச்சியுடன் இரு பெண்கள் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட குறித்த பெண்களிடம் இருந்து ஆமை இறைச்சி மற்றும் 211 ஆமை முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் மேலதிக விசாரணைக்காக ஆனவிலுந்து வனவிலங்கு காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டு, சிலாபம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆமை இறைச்சி மற்றும் 211 ஆமை முட்டைகளுடன் இரு பெண்கள் கைது ஆமை இறைச்சி மற்றும் 211 ஆமை முட்டைகளுடன் இரு பெண்கள் கைது Reviewed by Vanni Express News on 1/13/2019 03:57:00 PM Rating: 5