புத்தளம் பாலாவி பகுதியை சேர்ந்த ஒருவர் ஐஸ் எனும் போதைப்பொருளுடன் கைது

ஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் முந்தலம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (13) மாலை 3 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று தொடர்பில் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் வாகனத்தை உடப்பு பகுதியில் மறைத்து வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். 

பின்னர் மோப்ப நாயின் உதவியுடன் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். 

புத்தளம், பாலாவி பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் பாலாவி பகுதியை சேர்ந்த ஒருவர் ஐஸ் எனும் போதைப்பொருளுடன் கைது புத்தளம் பாலாவி பகுதியை சேர்ந்த ஒருவர் ஐஸ் எனும் போதைப்பொருளுடன் கைது Reviewed by Vanni Express News on 1/14/2019 03:36:00 PM Rating: 5