மகனுக்கு ஹெரோயின் வழங்கிய தந்தை கைது

பிபில மெதகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவருக்கு 25 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரவு உணவை வழங்க வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் அந்த உணவை பரிசோதித்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து 67 வயதுடைய தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
மகனுக்கு ஹெரோயின் வழங்கிய தந்தை கைது மகனுக்கு ஹெரோயின் வழங்கிய தந்தை கைது Reviewed by Vanni Express News on 1/18/2019 10:55:00 PM Rating: 5