ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

-ஐ. ஏ. காதிர் கான்

இரண்டு கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயினை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற இரண்டு குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதால், பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று முன் தினம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால், பொரளை – பேஸ்லைன் வீதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இரண்டு குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதால், இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் வெவ்வேறாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நான்கு பிள்ளைகளின் தாயான 54 வயது பெண்ணொருவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை Reviewed by Vanni Express News on 1/21/2019 05:09:00 PM Rating: 5