304 ஆமைகள் மற்றும் 86 நண்டுகளை வௌிநாட்டுக்கு கடத்த முற்பட்ட இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் 304 ஆமைகள் மற்றும் 86 நண்டுகளை வௌிநாட்டுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரண்டு சந்தேகநபர்களும் நேற்று இரவு 08.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 38 வயதுடைய கெகிராவ மற்றும் ரம்புக்கனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
304 ஆமைகள் மற்றும் 86 நண்டுகளை வௌிநாட்டுக்கு கடத்த முற்பட்ட இருவர் கைது 304 ஆமைகள் மற்றும் 86 நண்டுகளை வௌிநாட்டுக்கு கடத்த முற்பட்ட இருவர் கைது Reviewed by Vanni Express News on 1/30/2019 03:34:00 PM Rating: 5