போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது

ஒருதொகை போலி நாணயத்தாள்களுடன் மொரவெவ, ரொட்டவெவ பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மொரவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

சந்தேகநபரிடமிருந்து 1000 பெறுமதியான 95 போலி நாணயத்தாள்களும், 5000 ரூபாவுடைய 16 போலி நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேகநபர் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் ஹொரவப்பொத்தான பிரதேசத்தில் வைத்து மூன்று பேர் கைதாகியுள்ளனர். 

முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது 1000 பெறுமதியான 29 போலி நாணயத்தாள்களுடன் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது Reviewed by Vanni Express News on 1/31/2019 04:09:00 PM Rating: 5