சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த இருவர் கைது.

-வீ.பிரபாகரன் செய்தியாளர்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட சீத்தப்பட்டி காலனியை சேர்ந்த ஆறாம் வகுப்பு பயிலும் சிறுமி கடந்த ஏழாம் தேதி மாலை கடன் கழிக்க அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

சிறுமி இது குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் விசாரணை மேற்கொண்டபோது மேற்படி இருவரும் சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட  இருவரையும் நேற்று இரவு அரவக்குறிச்சி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த இருவர் கைது. சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த இருவர் கைது. Reviewed by Vanni Express News on 1/14/2019 04:19:00 PM Rating: 5