காதலுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ஆற்றில் குதித்த 16 வயது சிறுமி பலி - காதலன் கைது

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியை காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்போதும் குறித்த சிறுமியை காப்பாற்ற முடியாமல் போன சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பூநொச்சிமுனை வீதி 2 குறுக்கு வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய கிருஸ்ணபிள்ளை கிருஷாந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த சிறுமி க.பொ.தர சாதாரணதரத்தில் கல்வி கற்று வருகின்ற நிலையில் சம்பவதினமான நேற்று பகல் 12 மணியளவில் மட்டக்களகப்பு நகருக்கு சென்று விண்ணப்பம் ஒன்றை நிரப்ப செல்வதாக வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். 

இந்த நிலையில் குறித்த சிறுமி ஆரையம்பதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரன் வசந்தன் என்ற இளைஞனை காதலித்து வந்துள்ள நிலையில் இருவரும் சம்பவதினமான நேற்று பிற்பகல் 2 மணியளவில் கல்லடி பாலத்தில் வைத்து சந்தித்துள்ளனர். 

இதன்போது காதலனுக்கும் காதலிக்கும் இடையே சம்பாசனை இடம்பெற்றவேளை காதலி பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்துள்ளார். 

இதனை தொடர்ந்து காதலனுக்கு நீந்த தெரியாததால் காதலனின் நண்பன் குறித்த சிறுமியை காப்பாற்ற ஆற்றில் குதித்த போதும் அவரை காப்பாற்ற முடியாமல் அவர் நீந்தி கரைசேர்ந்தாகவும் அவரின் சடலத்தை காணமுடியவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து பொலிஸார் குறித்த காதலனை கைது செய்துள்ளதுடன் ஆற்றில் குதித்த சிறுமியின் சடலத்தை தேடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

இது தொடர்பாக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
காதலுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ஆற்றில் குதித்த 16 வயது சிறுமி பலி - காதலன் கைது காதலுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ஆற்றில் குதித்த 16 வயது சிறுமி பலி - காதலன் கைது Reviewed by Vanni Express News on 1/06/2019 03:04:00 PM Rating: 5