மாண‌வ‌ர்க‌ள் விட‌ய‌த்தில் ச‌ஜித் பிரேம‌தாச‌வின் க‌ருத்து முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள‌து

-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

அறியாம‌ல் செய்த‌ த‌வ‌றுக்காக‌ கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள் விட‌ய‌த்தில் ச‌ஜித் பிரேம‌தாச‌வின் க‌ருத்து முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள‌து. யாரைத்தான் ந‌ம்புவ‌து என்ற‌ ப‌ரிதாப‌ நிலைக்குள் ச‌மூக‌ம் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து.

இதைத்தான் 2005ம் ஆண்டு முத‌ல் உல‌மா க‌ட்சி சொல்லி வ‌ருகிற‌து. பேரின‌க்க‌ட்சிக‌ள் எதையும் நாம் க‌ண்ணை மூடிக்கொண்டு ஆத‌ரிக்க‌ முடியாது. ம‌ஹிந்த‌வோ, ர‌ணிலோ, ச‌ந்திரிக்காவோ, ச‌ஜித் பிரேம‌தாச‌வோ யாராக‌ இருப்பினும் அவ‌ர்தான் ந‌ம‌க்கு எல்லாமும் த‌ருவார் என‌ நினைக்க‌ கூடாது.

இத‌னால்த்தான் நான் ம‌றைந்த‌ த‌லைவ‌ர் அஷ்ர‌புட‌னும் முர‌ண் ப‌ட்டேன். ச‌ந்திரிக்கா ப‌ண்டார‌நாய‌க்காவை அவ‌ர் நூறு வீத‌ம் ந‌ம்பினார். ச‌மூக‌ம் சார்ந்த‌ எழுத்து மூல‌ ஒப்ப‌ந்த‌ம் இன்றி ந‌ம்பிக்கையின் அடிப்ப‌டையில் அவ‌ருக்கு ஆத‌ர‌வ‌ளித்தார். இத‌னை நான் க‌டுமையாக‌, ப‌கிர‌ங்க‌மாக‌ எதிர்த்தேன். என்னை முஸ்லிம் காங்கிர‌சின‌ர் துரோகியாக‌ பார்த்தார்க‌ள். பின்ன‌ர் கால‌ம் ப‌தில் சொல்லிய‌து ச‌ந்திரிக்கா யார் என்று. க‌டைசியில் த‌லைவ‌ர் ம‌க்காவுக்கு சென்று ஐம்ப‌து ப‌க்க‌ க‌டித‌ம் எழுதினார். ச‌ந்திரிக்கா மூல‌ம் முஸ்லிம் ச‌மூக‌ம் எந்த‌ உரிமையையும் பெற‌வில்லை என்ப‌துட‌ன் முஸ்லிம்க‌ளுக்கு சொந்த‌மான‌ திக‌வாப்பி காணிக‌ளையும் இழ‌க்க‌ வேண்டி வ‌ந்த‌து.

அதே போல் பின்ன‌ர் வ‌ந்த‌ ஹ‌க்கீம் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வை நூறு வீத‌ம் ந‌ம்பினார். ந‌ம்புவ‌தும் ஏமாறுவ‌தும், க‌ண்ணை திற‌ந்து கொண்டு ப‌டு குழியில் விழுந்து விட்டோம் என‌ சொல்வ‌தும் இன்று வ‌ரை அவ‌ர‌து தொழிலாகிவிட்ட‌து. 

ச‌மூக‌மும் ர‌ணில் என்ற‌ த‌னி ந‌ப‌ர் மீது அபார‌ ந‌ம்பிக்கை வைத்து ஏமாந்து ச‌ஜித் பிரேம‌தாச‌ வ‌ந்தால் எல்லாம் ச‌ரியாகிவிடும் எனும் நினைத்த‌து. ஏதோ அவ‌ரோடு இருந்து பார்த்த‌வ‌ர்க‌ள் போன்று அவ‌ர் ப‌ற்றி க‌ற்ப‌னை ப‌ண்ணிய‌து. இன்று அவ‌ர‌து இன‌வாத‌ சிந்த‌னையை இறைவ‌ன் காட்டிவிட்டான்.

ஆக‌வே முஸ்லிம் ச‌மூக‌ம் எந்த‌வொரு சிங்க‌ள‌ த‌லைமை மீதும் அபார‌ ந‌ம்பிக்கை வைக்காம‌ல் சூழ‌லுக்கேற்ப‌ முடிவெடுக்க‌ வேண்டும். இத‌னை உல‌மா க‌ட்சி திற‌ம்ப‌ட‌ செய்து காட்டிய‌து.

2005ம் ஆண்டு ஜ‌னாதிப‌தி தேர்ஹ‌லின் போது 90 வீத‌ முஸ்லிம்கள் ர‌ணிலை ந‌ம்பிய‌ சூழ‌லில் உல‌மா க‌ட்சி ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வ‌ளித்து அவ‌ர் மூல‌ம் யுத்த‌ம் நிறைவு பெற‌ துணை போன‌து. 

அதே ம‌ஹிந்த‌ கால‌த்தில் 2012ல் இன‌வாத‌ம் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ போது கிழ‌க்கு மாகாண‌ சபை தேர்த‌லின் போது கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் 95 வீத‌ம் அர‌ச‌ சார்பு க‌ட்சிக‌ளுக்கு பின்னால் நின்ற‌ போது உல‌மா க‌ட்சி ஐ தே க‌வுக்கு ஆத‌ர‌வ‌ளித்து ஆளும் க‌ட்சிக்கெதிரான‌ எதிர்ப்பை காட்டிய‌துட‌ன் யாராக‌ இருப்பினும் ச‌மூக‌த்துக்கு எதிரான‌ செய‌லை செய்தால் தேர்த‌ல் மூல‌ம் ந‌ம் எதிர்ப்பை காட்ட‌ வேண்டும் என்ற‌ அர‌சிய‌லை செய்து காட்டினோம். ஆனால் முஸ்லிம் ச‌மூக‌மோ சுய‌ந‌ல‌ த‌லைவ‌ர்க‌ள் சொல்வ‌தை வேத‌வாக்காக‌ க‌ருதி த‌லையில் ம‌ண் அள்ளிப்போட்ட‌து. 

ஆக‌வேதான் சொல்கிறோம் த‌னி ந‌ப‌ர் மோக‌ அர‌சிய‌லில் இருந்து நாம் விடுப‌ட்டு நாட்டின் சூழ‌லுக்கேற்ப‌, ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளுக்கேற்ப‌ அர‌சிய‌ல் தீர்மான‌ங்க‌ளை எடுக்க‌ வேண்டும்.
மாண‌வ‌ர்க‌ள் விட‌ய‌த்தில் ச‌ஜித் பிரேம‌தாச‌வின் க‌ருத்து முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள‌து மாண‌வ‌ர்க‌ள் விட‌ய‌த்தில் ச‌ஜித் பிரேம‌தாச‌வின் க‌ருத்து முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள‌து Reviewed by Vanni Express News on 1/29/2019 02:39:00 PM Rating: 5