வில்பத்து பாதை என்ன செய்யலாம்....?

-இஸ்ஸதீன் றிழ்வான்

வில்பத்து வனப் பகுதியினூடாக புத்தளம் ‍ ‍இலவனங்குலம் ‍‍ மன்னார் பாதையை சீர்செய்து மக்கள் பாவணைக்கு விடுவது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்துவருவதை நாம் அறிவோம். 

இந்த விடயம் மிக நீண்ட காலமாக நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிற ஒரு செய்தியும் கூட.

தற்காளிக பாதையினூடாக போக்குவரத்தை மேற்கொள்ளும் நிலையில் மழை காலங்களில் மிகப்பெரிய சவாலை நம் சமூகம் எதிர்நோக்கிவருவது மிகுந்த மனவருத்தத்தை தறுகிற ஒரு செய்தியாகும். 

மழைகாலத்தில் பாதை மூடப்படுவதும் அந்த வருத்தத்தில் நாம் ஆங்காங்கே சில நாற்களுக்கு பேசிவிட்டு மற‌ந்துவிடுவதும் வழக்கமாகிவிட்டது.

இந்த பாதையை நிரந்தரமாக திறப்பதற்கும்,கார்பட் பாதையாக மாற்றி மக்கள் பாவணைக்கு விடுவதற்கும் இந்த பிரச்சினைக்கு நிரந்த தீர்வைப்பெற்றுக்கொள்வதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்....? 

1. இந்த வில்பத்து பாதை விடயத்தை ஒரு பிரதேச மக்களின் முக்கிய பிரச்சினையாக மாற்ற வேண்டும்,

2. பிரதேசத்தின் மொத்த மக்களும் ஒரு காலப்பகுதியில் குரல்கொடுக்கும் பிரச்சினையாக மாற்ற வேண்டும்

3. தமிழ் மொழியை தாண்டி அதிகார வர்கத்தினர் பேசும் மொழி மற்றும் சர்வதேச சமூகத்திற்கு புரியும்படியான மொழியிலும் இந்த விடயம் சரலமாக பேசப்படல் வேண்டும், 

4. சமூக ஊடகங்களில் ஒரு குறித்த ஹேக்ஷ்டேக் மூலம் திரும்பத் திரும்ப பேசப்படும், பகிரப்படும் விடயமாக மாற்றப்படல் வேண்டும்

5. பிரதேசத்தின் எல்லா மக்களுக்கும் புரியும்படியான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளவேண்டும், 

6. கொழும்பு, கண்டி போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் மும்மொழிகளிளும் பத்திரிகையாளர் மாநாடுகளை ஏற்பாடுசெய்யவேண்டும்

7. சட்டரீதியான ஆவணங்கள் ஒழுங்குபடுத்தல் வேண்டும்

8. இப்பிரதேசத்திலுள்ள எல்லா கிராமங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரதிநிதி குழு ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும்

9. தகுதியான சட்டத்தரணிகள் உள்ளடக்கிய ஆலோசனைக் குழு ஒன்றும் ஸ்தாபிக்கப்படல் வேண்டும் 

10. நெடுஞ்சாலைகள் அமைச்சு, மாகாண அமைச்சு, முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு மகஜர் ஒன்றை சமர்பித்தல் வேண்டும்

11. குறித்த காலப் பகுதிக்குள் சரியான / சாதகமான தீர்வொன்றை தரும்படி வழியுறுத்த வேண்டும்

12. குறைந்தது 3 மாத கால பகுதிக்குள் சாதகமான தீர்வொன்று கிடைக்கவில்லை என்றால்  மக்களை ஒன்றுதிரட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய முடியும். 

13. கட்சி, ஊர் மற்றும் குடும்ப பேதமற்று இந்த விடயத்தில் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். 

14. 
15. 

இஸ்ஸதீன் றிழ்வான்
(ஆசிரியர், முசலிப்பிரதேச முக்கிராமங்கள்)
வில்பத்து பாதை என்ன செய்யலாம்....? வில்பத்து பாதை என்ன செய்யலாம்....? Reviewed by Vanni Express News on 1/07/2019 02:54:00 PM Rating: 5