முஸ்லிம் அமைச்சர்கள் இப்பொழுதும் நீதிமன்றம் ஏறுவார்களா ?

-அ(z)ஸ்ஹான் ஹனீபா

எமது முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அநீதிகளுக்கு நீதி கேட்டு நீதிமன்றம் ஏறாது, ஜனநாயகத்திற்கு ஏதும் பங்கம் ஏற்பட்டால் மாத்திரம்அதை தட்டிக்கேட்க ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக நீதிமன்ற வாசல் படி ஏறி சரியான தீர்வு கிடைக்கும் வரை வாதாடி உரிமைகளை வென்றெடுக்க போராடுவர்.

முஸ்லிம்களுக்காக இதுவரை காலமும் நீதிமன்றம் ஏறி நீதி கேட்காது, ஜனநாயகத்திற்காக மாத்திரம் எத்தனை அவாவுடன் நீதிமன்றத்தை நாடினார்கள் என்பது சர்வதேசம் அறிந்த உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.    

முஸ்லிம்களது பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் அனுப்பப்பட்டவர்கள் முஸ்லிம்களுக்கு வரும் பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தை நாடாமல், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மாத்திரம் நீதிமன்றத்தை நாடுவதில் எவ்வித பண்டமுமில்லை.

அதி முக்கியமான அத்தியவசிய பிரச்சினைக்கு முன்னின்று முகம் கொடுக்காது, மேலதிக பிரச்சினைக்காக மாத்திரம் போராடியது எவ்வகையில் நியாயமாகும்!.

ஜனநாயகத்திற்காக களத்தில் குதித்து இரவுபகலாக அயராது உழைத்தவர்கள், தற்போது கிழக்கில் இன வெறியர்களால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களுக்கு எதிராக நீதிமன்றம் ஏறஇ நீதி கேட்காததன் பின்னணியிலிருந்து விளங்குவது யாதெனில் இவர்களுக்கு அரசியலில் தங்களது இருப்பை மேலும் பலப்படுத்த மக்கள் பகடைக்காயாய் தேவையே ஒழிய, மக்களது பிரச்சினைகள் முக்கியமல்ல.

ஆக அரசியலுக்காக எதுவும் செய்யத் துனிந்தவர்கள் மக்களின் பிரச்சினையின் போதும் கைகோர்த்து ஒரேயணியாக நின்று செயற்படுவதே பக்கசார்பற்ற நீதியாகும். 

மக்களோடு அரசியலா? அல்லது அரசியலுக்காக மக்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
முஸ்லிம் அமைச்சர்கள் இப்பொழுதும் நீதிமன்றம் ஏறுவார்களா ? முஸ்லிம் அமைச்சர்கள் இப்பொழுதும் நீதிமன்றம் ஏறுவார்களா ? Reviewed by Vanni Express News on 1/09/2019 02:58:00 PM Rating: 5