ட்ரைமாஸ் மீடியா கேபிள் துண்டிப்பு - யாழ் மேயர் பதவி துஷ்பிரயோகம்

-நன்றி கெப்பட்டல்  நியூஸ்

ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைக்கான கேபிள்கள் சட்டவிரோதமான முறையில் அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைக்காக யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று யாழ் காவல் நிலையத்தில் பிரசன்னமாகவில்லை. 
ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் பொருத்தப்பட்டிருந்த கேபிள்களை, யாழ் மாநகர முதல்வர் தன்னிச்சையாகவும், சட்டவிரோதமான முறையிலும் நேற்று அகற்றியிருந்தார்.

ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைக்கான கேபிள்கள் சட்டவிரோதமான முறையில் அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைக்காக யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று யாழ் காவல் நிலையத்தில் பிரசன்னமாகவில்லை. ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் பொருத்தப்பட்டிருந்த கேபிள்களை, யாழ் மாநகர முதல்வர் தன்னிச்சையாகவும், சட்டவிரோதமான முறையிலும் நேற்று அகற்றியிருந்தார். யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தன்னிச்சையாக கேபிள்களை அகற்றியமை தொடர்பில் ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், மாநகர முதல்வரை யாழ் காவல் நிலையத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் பிரசன்னமாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், தாம் இன்றைய தினம் காவல் நிலையத்திற்கு வர முடியவில்லை என தனது பிரதிநிதி ஒருவர் ஊடாக அறிவித்துள்ளதாக யாழ் காவல் நிலைய உயரதிகாரி ஒருவர் கெப்பட்டல் நியூஸுக்கு கூறினார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் காவல் நிலைய உயரதிகாரி சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தன்னிச்சையாக சட்டவிரோதமான முறையில் ட்ரைமாஸ் மீடியா நிறுவனத்தின் கேபிள்களை அகற்றிய யாழ் மாநகர முதல்வர், காவல் துறையினரின் விசாரணையை நேர்மையுடன் எதிர்கொள்ளாமல் நழுவல் போக்கினை கடைப்பிடித்துள்ளார். இதன் மூலம் ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் கேபிள்களை அவர் அகற்றுவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் 30 கம்பங்களின் ஊடாக ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனம் தனது தொலைக்காட்சி சேவைக்கான கேபிள் இணைப்புகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டிருந்தது. இந்த கேபிள்கள் யாழ் மாநகர சபை முதல்வரின் தன்னிச்சையான முடிவின் பிரகாரம் சட்டவிரோதமான முறையில், இலக்கத் தகடற்ற பெக்கோ இயந்திரம் ஊடாக நேற்றைய தினம் அகற்றப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக யாழ் மாநகர ஆணையாளரிடம் கெப்பிட்டல் நியூஸ் வினயபோது, அதுகுறித்து யாழ் மாநகர சபையின் முதல்வரிடம் வினவுமாறு குறிப்பிட்டார்.

ஏனைய தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பாடல் சேவை நிறுவனங்கள் பின்பற்றியுள்ள சட்ட ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றியே  ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனத்தினால் கேபிள் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன என்பதை நாம் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றோம்.

இதன்பொருட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் வரி உள்ளிட்ட உரிய கட்டணங்கள் முழுமையாக செலுத்தப்பட்டு,RDA / EE / JAF / W / 72 என்ற ஆவணத்தின் ஊடாக பூரண அனுமதியுடன் ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் கேபிள்களைப் பொருத்தியுள்ளது என்பதையும் நாம் உறுதியுடன் கூறிக் கொள்கின்றோம்.

ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடைமுறையானது, வீதி அபிவிருத்தி அதிகார சட்டத்தின் பகுதி ஒன்றின் இரண்டாம் சரத்தின் பிரகாரம் சட்ட அங்கீகாரத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் வீதிஅபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் 26 ஆவது சரத்திற்கு அமைவாக, எந்தவொரு தனிமனிதனோ அல்லது அரச திணைக்களமோ அல்லது உள்ளூராட்சி அதிகார சபையோ அல்லது வேறு நிறுவனங்களோ - வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அல்லது மாகாண பணிப்பாளர் அல்லது பிரதம பொறியியலாளர் அல்லது நிறைவேற்றுப் பொறியியலாளரின் எழுத்துமூல அனுமதியின்றி, எரிவாயு, குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பாடல் அல்லது வேறு சேவைகளுக்காக ஏதேனும் ஒரு வீதியில் அல்லது பொது வீதி அல்லது பெருந்தெருக்களில் அகழ்வுகளையோ அல்லது இட ஒதுக்கீடுகளை முன்னெடுக்க முடியாது.

இந்த வரையறைகளுக்கு உடன்பட்டு, உரியவாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளரின் எழுத்துமூல அனுமதியுடன் ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனயம் தனது தொலைக்காட்சி சேவைக்கான கேபிள் இணைப்புகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டுள்ளது. எனினும், யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சார கம்பங்களில் கேபிள் இணைப்புகளை சிலர் முன்னெடுத்துள்ளமை மற்றும் அதன் மூலம் ஏற்படக்கூடிய உயிராபத்துகள் என்பன யாழ் மாநகர முதல்வரின் கண்களுக்குப் புலப்படாமல் இருப்பது வேடிக்கையானதாகும்.

அதேவேளை, ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனம் முறையற்ற விதத்தில் கேபிள் இணைப்புகளை மேற்கொண்டிருந்தால், அதற்குரிய சட்ட நடைமுறைகளின் பிரகாரம், முறையான அறிவித்தலை விடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கேபிள்களை அகற்றுவதற்கு நடவடிக்கைளை யாழ் நகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் மேற்கொண்டிருக்க வேண்டும்.

சட்ட நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமல், தனக்குள்ள மாநகர முதல்வர் பதவியின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து, கேபிள்களை அகற்றியமைக்கான காரணங்கள் என்னவென்று யாழ் மாநகர முதல்வர் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.

எனவே எமது கேபிள்கள் சட்டவிரோதமான முறையில் அகற்றப்பட்ட சம்பவத்தின் பின்புலத்தில் எவரேனும் செயற்படுகின்றனரா என்பது தொடர்பில் ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனம் ஆராய்ந்து வருகின்றது.

அவ்வாறு எவரேனும் செயற்படுகின்றமை கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கும் ட்ரைமாஸ் மீடியா நெட்வேர்க் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் நாம் அறியத்தருகின்றோம்.
ட்ரைமாஸ் மீடியா கேபிள் துண்டிப்பு - யாழ் மேயர் பதவி துஷ்பிரயோகம் ட்ரைமாஸ் மீடியா கேபிள் துண்டிப்பு - யாழ் மேயர் பதவி துஷ்பிரயோகம் Reviewed by Vanni Express News on 1/15/2019 10:21:00 PM Rating: 5