புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகரின் மகன்

இந்தி திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இம்ரான் ஆஸ்மி. இவரது மகன் அயான். கடந்த 2014-ம் ஆண்டு அயான் 3 வயதாக இருக்கும்போது, மிக அரிதாக ஏற்படும் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டான். 

பின்னர் தொடர் சிகிச்சைக்கு பிறகு அந்த நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளான். இந்த மகிழ்ச்சியை நடிகர் இம்ரான் ஆஸ்மி வலைதளம் மூலம் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:- 5 ஆண்டு சிகிச்சைக்கு பின்பு எனது மகன் புற்றுநோயில் இருந்து விடுபட்டுவிட்டான் என்பது பரிசோதனையில் தெரியவந்தது. உங்கள் அனைவரின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி. 

புற்றுநோயை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும் அனைவரும் அதிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்கிறேன். எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை உங்கள் நீண்டதூர லட்சியங்களை அடைய உதவும். நீங்கள் இந்த போராட்டதில் வெற்றி பெறுவீர்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகரின் மகன் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகரின் மகன் Reviewed by Vanni Express News on 1/16/2019 06:05:00 PM Rating: 5