haiiii

ஜனாதிபதி மற்றும் கல்வியமைச்சர் ஆகியோருக்கு நிந்தவூர் பிரதேசசபை தவிசாளரின் கடிதம்

-ஊடகப் பிரிவு 

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனங்களை விரைவு படுத்தக்கோரி ஜனாதிபதி மற்றும் கல்வியமைச்சர் ஆகியோருக்கு நிந்தவூர் பிரதேசசபை தவிசாளரின் கடிதம்.

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை அங்கீகரித்த ஜனாதிபதிக்கும் அத்திட்டத்தை அறிமுகம் செய்த கல்வியமைச்சருக்கும் வாழ்த்துக் கூறியும், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனங்கள் 8 மாதங்களாக தாமதமாகி இருப்பதால் அதனை விரைவுபடுத்த கோரியும் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்டுகிறது. 

அந்த வகையில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளார் எம்.ஏ.எம் தாஹிர் அவர்கள் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். 

அரச பாடசாலைகளில் வகுப்பறை கற்பித்தலுக்கு அப்பால் மைதானங்களில் கடமையாற்ற 3850 தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர்களை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்திருக்கும் கல்வியமைச்சு மற்றும் அதனை அங்கீகாரித்த, சனாதிபதிக்கும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் என்ற வகையில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒவ்வொரு மனிதர்களிடமும் வெவ்வேறுபட்ட திறமைகள் ஒழிந்திருக்கும் அதனை கண்டுபிடித்து அத்துறையில் அவர்களை முன்னேற்றுபவனே சிறந்த பயிற்றுவிப்பாளனாக இருக்க முடியும், அந்த வகையில் விளையாட்டுத் துறையில் தம்மை அர்பணித்த 3850 பேரை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக நியமனம் செய்வதன் மூலம் அடுத்து வரும் சில வருடங்களில் பாடசாலை விளையாட்டுத்துறையினை வளர்ச்சியடைய செய்ய முடியும்.

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தோர் கடந்த காலங்களில் எமது மாவட்டத்திற்கு விளையாட்டுத்துறையில் பெருமைகளை தேடித் தந்தவர்கள். அவ்வாறானவர்களுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எனும் அந்தஸ்த்தை கல்வியமைச்சு வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறான திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை விளையாடுவதற்கு எதிர்காலங்களில் அனுமதித்து அவர்களை ஊக்குவிக்க முடியும்.

விளையாட்டு வீரர்களை நாட்டின் சொத்துக்காளாக பார்க்க வேண்டுமே தவிர அவர்களை அரசியல் கட்சி முத்திரைகளை குத்திப் பார்க்கக் கூடாது. அரசியல் துறை வேறு, விளையாட்டுத் துறை வேறு. இரண்டிற்கும் முடிச்சு போட முடியாது. விளையாட்டில் திறமைக்கே முன்னுரிமையளிக்கப்படும். எனவே தெரிவு செய்யப்பட்ட 3850 விளையாட்டு சாதனையாளர்களுள் அதிகமானோர் விளையாட்டுடன் கூடிய பட்டப்படிப்பினையும், சிலர் இராணுவ கல்லூரிகளிலும், சிலர் இலங்கை தேசிய அணியிலும் விளையாடி வருகின்றார்கள். எனவே அவர்களிடம் உள்ள அனுபவங்கள் பாடசாலை மட்டத்தில் பயிற்றுவிப்பாக வருகின்ற போது பாடசாலை விளையாட்டுத்துறை அடைவு மட்டம் சிறப்பாக அமையும்.

கடந்த 8 மாதங்களாக 3850 சாதனை வீரர்கள் நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். எனவே விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எனும் திட்டத்தை அறிமுகம் செய்த கல்வியமைச்சும், அரசாங்கமும் அதனை விரைவாக அமுல்படுத்த வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் என்ற வகையில் வினயமாக வேண்டிக் கொள்வதாக ஜனாதிபதி மற்றும் கல்வியமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: ஜனாதிபதி மற்றும் கல்வியமைச்சர் ஆகியோருக்கு நிந்தவூர் பிரதேசசபை தவிசாளரின் கடிதம்
ஜனாதிபதி மற்றும் கல்வியமைச்சர் ஆகியோருக்கு நிந்தவூர் பிரதேசசபை தவிசாளரின் கடிதம்
https://2.bp.blogspot.com/-YRB71IgxgQI/XEhWfa1v27I/AAAAAAABS_U/kuGj97aDIu0WHFygeFxV1-OQBqSs0LoRQCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://2.bp.blogspot.com/-YRB71IgxgQI/XEhWfa1v27I/AAAAAAABS_U/kuGj97aDIu0WHFygeFxV1-OQBqSs0LoRQCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/01/chairmen.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/01/chairmen.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy