தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வட மாகாண பாடசாலைகளுக்கு 14 ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார் என ஆளுநரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த விடுமுறை தினத்துக்கான மாற்றுப் பாடசாலை தினம் பின்னர் அறிவிக்கப்படும் என ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை Reviewed by Vanni Express News on 1/11/2019 11:47:00 PM Rating: 5