இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர்

-முதல்வரின் ஊடகப்பிரிவு 

யாழ் சென் ஜேம்ஸ் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் மாநகர முதல்வர் பிரதம விருந்தினராக பங்கேற்பு.

யாழ்ப்பாணம் சென் ஜேம்ஸ் மகாவித்தியாலயத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு நேற்று (29) மதியம் 1.30 மணியளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அதிபர் திரு.க.கலியுகன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், விசேட உரையொன்றினையும் ஆற்றியிருந்தார். 

இல்ல மெய்வல்லுநர் நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அருட்தந்தை சி. ஜஸ்ரின் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு.வில்வராஜா வரதன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 
இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் Reviewed by Vanni Express News on 1/30/2019 03:18:00 PM Rating: 5