தம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை

தம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­மா­ணிப்­பது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை தம்­புள்ளை ஓய்வு விடு­தியில் (ரெஸ்ட் ஹவுஸ்) இடம்­பெற்­றது. 

இக்­க­லந்­து­ரை­யா­டலில் தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் பிர­தி­நி­திகள், தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத ஆகியோர் கலந்து கொண்­டனர். வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்றது.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­னரும் மாத்­தளை, இரத்­தோட்டை, தொகு­தி­க­ளுக்­கான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் அமைப்­பா­ள­ரு­மான எஸ்.வை.எம். சலீம்தீன் கருத்து தெரி­விக்­கையில்;

‘தம்­புள்ளை மேயர் தம்­புள்­ளை­யி­லி­ருந்தும் 19 கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்ள நிக்­க­வட்­ட­வன பகு­தி­யிலே தம்­புள்ளை பள்­ளி­வா­சலை நிர்­ம­ணிக்க காணி­யொன்று தரு­வ­தாக கூறு­கிறார்.

பள்­ளி­வாசல் ஐவேளை தொழு­வ­தற்கு வச­தி­யாக தம்­புள்­ளை­யி­லேயே அமைய வேண்டும். அதனால் தம்­புள்­ளை­யி­லேயே காணி வழங்­கப்­பட வேண்டும். நிக்­க­வட்­ட­வன பகு­திக்கு பள்­ளி­வா­சலை அகற்­றிக்­கொள்ள நாம் தயா­ராக இல்லை.

முன்னாள் அமைச்சர் சம்­பிக்­க­ர­ண­வக்­க­வினால் ஏற்­க­னவே காணி­யொன்று ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அக்­காணி பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து 150 மீற்­றர்­க­ளுக்­கப்பால் புனித பிரதேச எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. அக்காணியே எமக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையேல் பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை.

இவ்விகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளோம் என்றார்.
தம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை தம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை Reviewed by Vanni Express News on 1/14/2019 10:58:00 PM Rating: 5