முரண்பாடு மோதலாக மாறியதில் கணவனின் தாக்குதலில் மனைவி பலி

ராகம, மெத்தேகொட பகுதியில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கனேமுல்ல, மெத்தேகொட பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முரண்பாடு மோதலாக மாறியதில் கணவனின் தாக்குதலில் மனைவி பலி முரண்பாடு மோதலாக மாறியதில் கணவனின் தாக்குதலில் மனைவி பலி Reviewed by Vanni Express News on 1/24/2019 05:48:00 PM Rating: 5