செல்லப் பிராணியாக நாய் வளர்ப்பவரா நீங்கள் ? அப்புடி என்றால் உங்களுக்கு இந்த நோய் இருக்கலாம்

செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களில் பரவக் கூடிய ஒருவகை நோய் முதன்முதலாக இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த நோய் தென்னாபிரிக்க நாடுகளில் பரவலாக இருக்கிறது. இது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியது என்பதை பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நோய் பாரதூரமானது அல்ல. எனினும் இதன்மூலம் தோளில் பாதிப்பு ஏற்படக் கூடுமென பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அசோக்க தங்கொல்ல தெரிவித்தார். 

கண் நோயால் பாதிக்கப்பட்ட செல்லப் பிராணி பேராதனை கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 

அந்த செல்லப் பிராணியை சோதித்த போது அதற்கு ட்ரை-பெனசோமா என்ற நோய் ஏற்பட்டிருந்தமை தெரிய வந்ததாக பேராசிரியர் தங்கொல்ல குறிப்பிட்டார். 
செல்லப் பிராணியாக நாய் வளர்ப்பவரா நீங்கள் ? அப்புடி என்றால் உங்களுக்கு இந்த நோய் இருக்கலாம் செல்லப் பிராணியாக நாய் வளர்ப்பவரா நீங்கள் ? அப்புடி என்றால் உங்களுக்கு இந்த நோய் இருக்கலாம் Reviewed by Vanni Express News on 1/12/2019 03:40:00 PM Rating: 5