அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட தீர்மானம்

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் ஏமாற்றப்பட்டுள்ள உறுப்பினர்கள் செயற்படுவதற்கு தான் முன்நிற்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்ப்பினர் துனேஷ் கன்காந்த கூறியுள்ளார். 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தான் எதிர்பார்த்த எதுவும் எமது மக்களுக்கு வழங்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 

ஶ்ரீலங்க சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றுடன் தொடர்புடைய கட்சிகளின் அமைப்பாளர்கள் இணைந்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தனர். 

இந்த மாதத்திற்குள் இணைந்த கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க எதிர்பார்ப்பதாக இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன கூறினார்.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட தீர்மானம் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட தீர்மானம் Reviewed by Vanni Express News on 1/05/2019 05:29:00 PM Rating: 5