இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகாக பதிவாகியிருந்ததாக, தேசிய பூகம்பவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. 

நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தமான் நிக்கோபார் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடல் நீர் மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாததால், சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை, என கடல்சார் தேசிய தகவல் மைய இயக்குனர் எஸ்பிஎஸ்.ஷெனாய் கூறியுள்ளார். 

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் Reviewed by Vanni Express News on 1/17/2019 04:30:00 PM Rating: 5