தீப்பரவலில் சிக்கிய குடும்பம் மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் - இருவர் வைத்தியசாலையில்

கண்டி - யடிநுவர வீதியில் அமைந்துள்ள மாடிக்கட்டிட தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சிறிய அளவில் காயமடைந்த இரண்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை 07.20 மணியளவில் ஏற்பட்ட தீ தற்போதைு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

கண்டி - யடிநுவர வீதியில் அமைந்துள்ள கட்டிடதொகுதியின் மேல் மாடியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணடாக அங்கு தங்கியிருந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர். 

கட்டிடத்தில் சிக்கியிருந்த தந்தை, தாய் மற்றும் பிள்ளைகள் மேல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதுடன், பின்னர் அவர்கள் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளனர். 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீப்பரவலில் சிக்கிய குடும்பம் மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் - இருவர் வைத்தியசாலையில் தீப்பரவலில் சிக்கிய குடும்பம் மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் - இருவர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 1/08/2019 03:36:00 PM Rating: 5