07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். 

தீயினால் உயிராபத்து ஏற்படவில்லை என்ற போதிலும், கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள 07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம் 07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம் Reviewed by Vanni Express News on 1/19/2019 05:22:00 PM Rating: 5