பாரிஸில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் 20 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 20 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். 

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாரிஸில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் 20 பேர் காயம் பாரிஸில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் 20 பேர் காயம் Reviewed by Vanni Express News on 1/12/2019 10:43:00 PM Rating: 5