ஒரே விடயத்திற்காக இருமுறை வரி - பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது

எவ்வித அடிப்படையும் இல்லாமல் தற்போதைய அரசாங்கம் காபன் வரியை கொண்டுவந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. 

புகை பரிசோதனையின் மூலமும் வாகனங்களில் இருந்த வெளியாகும் காபனுக்காக வரி விதிக்கப்படுவதனால் குறித்த காபன் வரியை நீக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார். 

ஒரே விடயத்திற்காக இருமுறை வரி அறிவிட அரசாங்கம் தயாராகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நேற்று (15) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விலை குறைக்கப்படும் விதத்தில் எவ்வித பிரயோஜனமும் இல்லை எனவம் அவர் தெரிவித்துள்ளார். 

இரண்டு ரூபாவினால் எரிபொருள் விலையை குறைப்பதன் மூலம் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், இதனால் நாள் ஒன்றிற்கு அரசாங்கம் 200 இலட்சம் ரூபா நட்டமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே விடயத்திற்காக இருமுறை வரி - பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது ஒரே விடயத்திற்காக இருமுறை வரி - பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது Reviewed by Vanni Express News on 1/16/2019 04:33:00 PM Rating: 5