விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் ஹரீன் கையளித்தார்

-ஐ. ஏ. காதிர் கான் 

பதுளை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்குட்பட்ட ஐம்பது விளையாட்டுச் சங்கங்களுக்கு, குறித்த சங்கங்களின் விளையாட்டுத்துறைகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் நோக்கில், விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய ஐம்பது பொதிகள் கையளிக்கும் வைபவம், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தலைமையில், கடந்த (05) சனிக்கிழமை இடம்பெற்றது.

இது தொடர்பிலான பிரதான நிகழ்வு, பதுளையில் அமைந்துள்ள ஊவா மாகாண அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது, அமைச்சர் இவ்விளையாட்டுப் பொதிகளை குறித்த சங்க உறுப்பினர்களிடம் வழங்கி வைத்தார். 

 இந்நிகழ்வில், ஊவா மாகாண விளையாட்டு அதிகாரிகள், மாகாண பாடசாலை விளையாட்டு ஆலோசகர்கள் மற்றும் விளையாட்டுச் சங்கங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் ஹரீன் கையளித்தார் விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் ஹரீன் கையளித்தார் Reviewed by Vanni Express News on 1/08/2019 04:09:00 PM Rating: 5