வைத்தியசாலைக் கட்டட திறப்பும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கௌரவும் வழங்கி வைப்பு

-பைஷல் இஸ்மாயில்

25 மில்லியன் ரூபா நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக் கட்டட திறப்பு விழா (20) கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக் கட்டிடத்தை திறந்து வைத்தார். 

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.அலாவுத்தீன் ஆகியோர்களுக்கு பொண்னாடை போர்த்தி ஞாபகச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. 
வைத்தியசாலைக் கட்டட திறப்பும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கௌரவும் வழங்கி வைப்பு வைத்தியசாலைக் கட்டட திறப்பும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கௌரவும் வழங்கி வைப்பு Reviewed by Vanni Express News on 1/23/2019 12:22:00 PM Rating: 5