இன்று முதல் நாடு முழுவதும் ஸ்மார்ட் அடையாள அட்டை விநியோகம்

இன்று (01) முதல் ஆட்பதிவு திணைக்களத்தினால் ஸ்மார்ட் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தவகை அடையாள அட்டைகளை விநியோகிக்கும் திட்டம் மேல் மற்றும் சப்ரபமுவ மாகாணங்களில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். 

இந்த திட்டம் வெற்றியளித்துள்ளதால் இன்று முதல் நாடு முழுவதும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். 

இந்த அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக தங்களது புகைப்படங்களை விண்ணப்பங்களில் ஒட்ட வேண்டிய தேவையில்லை என்றும் மின்னஞ்சல் ஊடாக ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

அடையாள அட்டைகளுக்காக போலி புகைப்படங்கள் மற்றும் பிழையான தகவல்கள் உள்ளடக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் நாடு முழுவதும் ஸ்மார்ட் அடையாள அட்டை விநியோகம் இன்று முதல் நாடு முழுவதும் ஸ்மார்ட் அடையாள அட்டை விநியோகம் Reviewed by Vanni Express News on 1/01/2019 12:02:00 PM Rating: 5