நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் ஒரே தினத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். 

பாதுக்க பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

முக்கியமாக தென், ஊவா மற்றும் மேல் மாகாண ஆளுனர்கள் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலுக்கும் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் Reviewed by Vanni Express News on 1/28/2019 11:57:00 PM Rating: 5