தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் - முதல்வருக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

-முதல்வரின் ஊடகப் பிரிவு 

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் - இலங்கைக்கான தென்னாபிரிக்க உரிஸ்தானிகர் ரொபினா பி மார்க்ஸ் அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று கடந்த (26) நடைபெற்றது. 

இச்சந்திப்பில் முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. முதலாவதாக தென்னாபிரிக்காவின் சுதந்திர தின விழாவை இம்முறை யாழ் மாநகரத்தில் விழாவாக முன்னெடுப்பது தொடர்பாகவும், சுதந்திர தின விழாவில் தெரிவு செய்யப்படும் 200 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரத் திட்டங்களை வழங்குவதற்கு எண்ணியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனை முன்னெடுப்பதற்கான திட்டமிடல்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

அடுத்து தற்போதைய சூல் நிலையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்தும், அதன் நெறுக்கடி நிலை மற்றும் சாதக பாதகங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை மீதான தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் உயர்ஸ்தானிகர் வினவியதற்கு பதிலளித்த முதல்வர் அவர்கள் 'இம்முறை கொண்டுவரப்படுகின்ற தீர்மானத்தில்தான் இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரல் மார்ச் ஜெனீவா மாநாட்டில்  தொடர்ந்தும் இருக்கப் போகினறதா? இல்லையா என்று தெரியவரும். 30. 1 தீர்மானத்தின் மீதான நம்பிக்கை குறைவாக இருந்ததனாலேயே சர்வதேசத்தின் அனுசரணையோடு 34. 1 தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இலங்கை மீதான தீர்மானம் தொடர்பில் சர்வதேசத்தின் அனுசரணையைப் பெற்றுக் கொள்வதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை தாங்கள் அறிந்ததே. 

பல தசாப்தங்களாக இவ் அரசாங்கத்தை நம்பி நம்பி மக்கள் தற்பொழுது மிகக் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றார்கள். எனவே மார்ச் மதமளவில் இலங்கை மீது கொண்டுவரப்பட வேண்டிய தீர்மானம் தொர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முன்னெடுத்து வருகின்றது. இருப்பினும் அரசின் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கின்ற மக்களை சந்தித்து கூட்டமைப்பு தலைமை பொறிமுறை தொடர்பில் உரிய தெளிவுகளை கொடுப்பதுடன் மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுத்தான் மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நான் எண்ணுகின்றேன். இது தொடர்பில் கட்சித் தலைமைக்கும் விளக்கியிருக்கின்றேன் என்று முதல்வர் கூறியிருந்ததுடன், கட்சிதான் இறுதித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

இறுதியாக தென்னாபிரிக்காவினால் யாழ் மாநகரத்தினுல் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள்  தொடர்பில் முன்மொழிவுகளை உயர்ஸ்தானிகர் முதல்வரிடம் கேட்டிருந்தார். உரிய முறையில் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதாக முதல்வர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். 

இவ்வாறாக இரண்டு மணி நேரங்கள் இக் கலந்துரையாடல் மிகவும் ஆரோக்கியமான முறையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 
தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் - முதல்வருக்குமிடையில் விசேட கலந்துரையாடல் தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் - முதல்வருக்குமிடையில் விசேட கலந்துரையாடல் Reviewed by Vanni Express News on 1/29/2019 11:10:00 PM Rating: 5