இலவச ஒரு நாள் ஊடகச் செயலமர்வு மீடியா டிப்ஸ் 4ஆவது முறையாகவும்

இலவச ஒரு நாள் ஊடகச் செயலமர்வு, மீடியா டிப்ஸ் 4ஆவது முறையாகவும் - Media Workshop Free News MediaTips JMmedia Certificate

மாவனல்லை (JM Media Production & College) ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் மற்றும் ஜே.எம் மீடியா ஊடகக் கல்லூரி இணைந்து நான்காவது முறையாகவும் ஏற்பாடு செய்திருக்கும் இலவச ஒரு நாள் ஊடக செயலமர்வு 2019 ஜனவரி மாதம் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவனல்லை ஸ்னோஸ் வரவேற்பு மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ராஷித் மல்ஹர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த இலவசக் கருத்தரங்கு தேசிய புகழ் பெற்ற பல ஊடகவியளாலர்களைக் கொண்டு நடாத்தப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் தமிழ் பேசும் ஊடகர்கள், மாணவர்கள், ஊடக அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகின்றவர்கள், ஊடக ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையங்களை செயற்படுத்துகின்றவர்கள் அனைவரும் வயதெல்லையின்றி இச்செயலமர்வில் பங்குபற்றி பயன்பெறலாம்.

பங்கு பற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலதிக தகவல்கள் மற்றும் பதிவுகளுக்கு, ரஸா மல்ஹர்தீன் 0777 162 511
இலவச ஒரு நாள் ஊடகச் செயலமர்வு மீடியா டிப்ஸ் 4ஆவது முறையாகவும் இலவச ஒரு நாள் ஊடகச் செயலமர்வு மீடியா டிப்ஸ் 4ஆவது முறையாகவும் Reviewed by Vanni Express News on 1/02/2019 02:16:00 PM Rating: 5