மலையக மக்கள் முன்னனியின் உப தலைவர் இ.தொ.காவில் இணைவு

-க.கிஷாந்தன்

சப்பிரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னனியில் உப தலைவராக செயற்பட்ட ரூபன் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை 20.01.2019 பிற்பகல் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்துக் கொண்டார்.

கொட்டகலையில் அமைந்துள்ள காங்கிரசின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒன்று கூடலுக்கு வருகை தந்த ரூபன் பெருமாள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பொன்னாடை போர்த்தி காங்கிரசில் தமது இணைவை உறுதிப்படுத்தினர்.

ரூபன் பெருமாள் காங்கிரசிற்கு வருகை தந்ததை கௌரவிக்கும் முகமாக இலங்கை தொழிலாளரின் காங்கிரசின் உப செயலாளர் பதவி ஆறுமுகன் தொண்டமானால் ரூபன் பெருமாளுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் காங்கிரசின் மிக நீண்டகால செயற்பாட்டு உறுப்பினராக இருந்த இரத்தினபுரி மாவட்டத்தின் தம்பிராஜ் அவர்களுக்கும் உப செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இதன் போது காங்கிரசின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னால் மகாணசபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மலையக மக்கள் முன்னனியின் உப தலைவர் இ.தொ.காவில் இணைவு மலையக மக்கள் முன்னனியின் உப தலைவர் இ.தொ.காவில் இணைவு Reviewed by Vanni Express News on 1/21/2019 04:40:00 PM Rating: 5