கிண்ணியா சம்பவம் - நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த ஒருவர் சடலமாக மீட்பு

கிண்ணியா பகுதியில் மகாவெலி ஆற்றில் குதித்த மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து கிண்ணியா கங்கைப் பாலம் பகுதியில் குறித்த இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்து மூழ்கியுள்ளனர். 

இதில் ஒருவர் தப்பித்துள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். 

இந்நிலையிலேயே, ஆற்றில் குதித்த காணமற்போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கிண்ணியா சம்பவம் - நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த ஒருவர் சடலமாக மீட்பு கிண்ணியா சம்பவம் - நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த ஒருவர் சடலமாக மீட்பு Reviewed by Vanni Express News on 1/29/2019 11:32:00 PM Rating: 5