மஸ்தான் M.P எடுத்த முயற்சி கரம்பை இலந்தமோட்டையில் புதியதோர் மஸ்ஜித் நிர்மாணிப்பு

-ஊடகப்பிரிவு

புத்தளம் கரம்பை இலந்தைமோட்டை மக்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் எடுத்துக்கான கொண்ட முயற்சியின் பலனாக கைரியா நிறுவனத்தின் அநுசரணையுடன் துபாய் நாட்டு தனவந்தரான ஹசன் ஹுஸைன் அவர்களது நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜித் ஆயிஷா சித்தீக்கா நேற்று லுஹர் தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.

இப்பகுதியில் வாழும் மக்களின் ஆன்மீக நோக்கங்கங்களை நிறைவு செய்ய அல்லாஹ்த்தஆலா வின் அருளை எதிர்பார்த்து அமல்கள் புரியவும் இந்த மஸ்ஜித் கேந்திர நிலையமாக விளங்கும்.

பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் தனவந்தர்கள் ஹஸன் ஹுஸைன் ,அஹமது ஹரம் ஆகியோருடன் நிறுவன இணைப்பாளர் முபஸ்ஷிர்,ஐ.எஸ்.ஆர்.ஸி.இணைப்பாளர் மிஹ்லார் உள்ளிட்ட அனைத்து பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள் மகல்லா வாசிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மஸ்தான் M.P எடுத்த முயற்சி கரம்பை இலந்தமோட்டையில் புதியதோர் மஸ்ஜித் நிர்மாணிப்பு மஸ்தான் M.P எடுத்த முயற்சி கரம்பை இலந்தமோட்டையில் புதியதோர் மஸ்ஜித் நிர்மாணிப்பு Reviewed by Vanni Express News on 1/02/2019 03:08:00 PM Rating: 5