கல்வியும் விளையாட்டும் மாணவச்செல்வங்களின் உயிர்மூச்சாக இருக்கட்டும் - மஸ்தான் M.P

-ஊடகப்பிரிவு.

கல்வியைப் போன்றே விளையாட்டும் எமது வாழ்வில் இன்றியமையாத அம்சமாகும்.

விளையாட்டுக்கள் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமடைவது மாத்திரமன்றி ஐக்கியம் விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை,புரிந்துணர்வு என சமூகவுணர்வுகள் எம்மிடம் ஏற்படுகின்றன. 

இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னால் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் குறிப்பிட்டார்.

பாடசாலை அதிபர் ஜனாப். ஏ.எம்.சாக்கீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது.  

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் கல்வி மிகப் பிரதானமானது என்பதை பெற்றோர் உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் விளையாட்டுக்களின் வகிபாகத்தை சுட்டிக்காட்ட விழையும் அதேவேளை அது எமது நாட்டின் அபிவிருத்தியிலும் தன்னிறைவிலும் பாரிய  பங்களிப்பை நல்குகின்றது என்பதையும் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். 

நான் பிரதி அமைச்சராக பதவி வகித்த குறுகிய காலத்தினுள்ளே கிட்டத்தட்ட ஐந்நூறு   மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்திகளை செய்திருக்கின்றேன்.

இதில் கணிசமான அளவு கல்விக்கும் விளையாட்டுக்கும் செலவிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். 

இந் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எ. சந்தியோகு முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ முத்தலிபாவா பாறுக் ஐ.எஸ்.ஆர்.ஸி பனிப்பாளர் ஜனாப்.மிஹ்லார் மற்றும் மடு வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
கல்வியும் விளையாட்டும் மாணவச்செல்வங்களின் உயிர்மூச்சாக இருக்கட்டும் - மஸ்தான் M.P கல்வியும் விளையாட்டும் மாணவச்செல்வங்களின் உயிர்மூச்சாக இருக்கட்டும் - மஸ்தான் M.P Reviewed by Vanni Express News on 1/31/2019 11:24:00 PM Rating: 5