மக்கள் தயார் என்றால் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்க நான் தயார்

நாட்டு மக்கள் தயார் என்றால், எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்க தான் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவரது ஊடகச் செயலாளர் மிலிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பயோடெக்நொலஜி மாநாட்டில் உரையாற்றும் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்ததாகவும் மிலிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடம் நாட்டுக்கு மிகவும் தீர்மானம் மிக்க ஆண்டு எனவும் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்ததாகவும் மிலிந்த மேலும் கூறியுள்ளார்.
மக்கள் தயார் என்றால் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்க நான் தயார் மக்கள் தயார் என்றால் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்க நான் தயார் Reviewed by Vanni Express News on 1/13/2019 04:15:00 PM Rating: 5