நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிட தடை

முக்கிய பிரமுகர்கள் கொலை சதித்திட்டம் சம்பந்தமாக ஊழல் எதிர்ப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. 

நாமல் குமார கொலைச் சதிதிட்டம் தொடர்பில் பகிரங்கமாக கருத்து வௌியிட்டுக் கொண்டிருப்பதால் பிரச்சினைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிட தடை நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிட தடை Reviewed by Vanni Express News on 1/04/2019 11:58:00 PM Rating: 5