நாளை மறுதினம் தனது கடமைகளை பொறுப்பேற்கிறார் அப்துல்லா மஹ்ரூப்


துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்து கொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், நாளை மறுதினம் திங்கட்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளவுள்ளார். 

நாளை மறுதினம் திங்கட்கிழமை (14) காலை 11.00 மணிக்கு கொழும்பு-01 ல் அமைந்துள்ள துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர் கடமைகளை  பொறுப்பேற்கவுள்ளதாக பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூபின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்நிகழ்வில் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க உட்பட அமைச்சின் செயலாளர், கட்சி ஆதரவாளர்கள், பிரதி அமைச்சரின் உறவினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 
நாளை மறுதினம் தனது கடமைகளை பொறுப்பேற்கிறார் அப்துல்லா மஹ்ரூப் நாளை மறுதினம் தனது கடமைகளை பொறுப்பேற்கிறார் அப்துல்லா மஹ்ரூப் Reviewed by Vanni Express News on 1/12/2019 11:28:00 PM Rating: 5