மாநகர முதல்வருக்கும் - வடமாகாண ஆளுநருக்கு இடையில் சந்திப்பு

-முதல்வரின் ஊடகப் பிரிவு 

மாநகர முதல்வருக்கும் - வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு 

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் - வடக்குமாகாண ஆளுநர் கௌரவ சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையில் உத்தியோக சந்திப்பு ஒன்று கடந்த வாரம் (18) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இச் சந்திப்பில் யாழ் மாநகரத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பசுமை மாநகரை உருவாக்கும் செயற்றிட்டத்தில் முன்னாள் ஆளுநர் அவர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்தல் தொடர்பிலும் மற்றும்  எதிர்காலத்தில் மாநகரில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

இச் சந்திப்பின் போது யாழ் மாநகர ஆணையாளர் திரு. ஜெயசீலன் அவர்களும் இணைந்திருந்தார். யாழ் மாநகர சபை சார்பில் ஆளுநர் அவர்களுக்கு கௌரவிப்புடன் கூடிய வரவேற்பும், நினைவுச் சின்னம் ஒன்றும் முதல்வர் மற்றும் ஆணையாளர் இணைந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

மாநகர முதல்வருக்கும் - வடமாகாண ஆளுநருக்கு இடையில் சந்திப்பு மாநகர முதல்வருக்கும் - வடமாகாண ஆளுநருக்கு இடையில் சந்திப்பு Reviewed by Vanni Express News on 1/22/2019 11:43:00 PM Rating: 5