இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பு மைத்ரிபால - சந்திரிகா

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

இலங்கையின் முன்னாள் பிரதமர்களுள் ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகருமான எஸ்.S.W.R.D பண்டாரநாயக்கவின் 120 வது நினைவு தினம் இன்று காலிமுகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க நினைவு தூபிக்கு முன்னால் இடம்பெற்றது.

இதன்போது அமரர் பண்டாரநாயக்கவின் சிலைக்கு தற்போதைய சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோருக்கிடையில் கருத்து பரிமாறல்கள் இடம்பெறவில்லை என்பதுடன் மலர்மாலை அணிவித்த நிகழ்வுடன் ஜனாதிபதி உடனடியாக வெளியேறியுள்ளார்.

எனினும் குறித்த நிகழ்வில் சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கிடையில் நீண்ட கருத்து பரிமாறல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பு மைத்ரிபால - சந்திரிகா இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பு மைத்ரிபால - சந்திரிகா Reviewed by Vanni Express News on 1/08/2019 11:35:00 PM Rating: 5