இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தயார்

புத்தளம், நாவலப்பிட்டிய மற்றும் மன்னார் இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகங்களில் (SLIATE) நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (24) பாராளுமன்ற குழு அறையில் சந்திப்பொன்று நடைபெற்றது. 

மன்னாரில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கிவரும் SLIATE நிறுவனத்துக்கு உயிலங்குளத்தில் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும்நோக்கில் புதிய கற்கைநெறிகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. 

அத்துடன், நிரந்தர கட்டிடமின்றி இயங்கிவரும் புத்தளம் SLIATE நிறுவனத்துக்கு நிரந்தரக் கட்டிடமொன்றை அமைப்பதுடன், பெளதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பது குறித்தும் ஆலோசனைகள் பெற்றப்பட்டது. இதுதவிர இடப்பற்றாக்குறையினால் நெருக்கடிகளை எதிர்நோக்கம் நாவலப்பிட்டி SLIATE கிளையின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. 

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாறூக், எம்.பி. பாறூக், உயர்கல்வி அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தயார் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தயார் Reviewed by Vanni Express News on 1/24/2019 11:57:00 PM Rating: 5