பால்மா விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவுக்காக விலைச்சூத்திரம் ஒன்றை எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

பால்மா விலை சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கூறியுள்ளது. 

இறக்குமதி பால்மாவின் விலையை அதிகரிகள் நிறுவனங்கள் சில அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தன. 

அதன்படி பால்மா இறக்குமதி நிறுவன பிரதிநிதிகள், நிதியமைச்சின் அதிகாரிகள், வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பிரதிநிதிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

இதன்போது எரிபொருளுக்கு போன்றே பால்மாவிற்கும் விலைச்சூத்திரம் ஒன்றை எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிமுகப்படுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் பால்மாவுக்கு காணப்படுகின்ற விலைக்கு அமைவாக நாட்டிலும் பால்மாவின் விலை மாற்றமடையும் வகையில் இந்த விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பால்மா விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது பால்மா விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது Reviewed by Vanni Express News on 1/24/2019 05:32:00 PM Rating: 5