பாராளுமன்ற அங்கத்தவர் தரவரிசைப்படுத்தலில் அனுரகுமாரவுக்கு முதலிடம் முஜீபுர் றஹ்மானுக்கு இரண்டாமிடம்

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு சிறப்பாக செயற்பட்டவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையில் முதலாமிடத்தை ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்டுள்ளார்.  

இரண்டாம் இடத்தை ஐக்கிய தேசியக் கட்சியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் பெற்றுக்கொண்டுள்ளார்.  

இந்தத் தகவலை  manthri.lk இணைய தளம் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் பாராளுமன்ற அமர்வுகளையும் செயற்பாடுகளையும்  மையமாக வைத்து இந்த தரவு திரட்டப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற அங்கத்தவர்கள் பத்து பேர் இதன் மூலம் தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளனர்.  அவர்களின் விபரம் வருமாறு முதலாம் இடம் ஜே.வி.பி கட்சியின் தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  அனுரகுமார திசாநாயக்க  இரண்டாம் இடம் ஐக்கிய தேசியக் கட்சியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் மூன்றாவது இடம்   இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஜானமுத்து  ஸ்ரீநேசன் நான்காவது இடம்   ஜேவிபி கட்சி கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி ஐந்தாவது இடம்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) யாழ்ப்பாணம் மாவட்டம்  பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா.

ஆறாவது இடம்   தேசிய சுதந்திர முன்னணியின்  (NFF) கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்   விமல் வீரவங்ச ஏழாவது இடம்  ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்க கட்சியின் முதற்கோலாசானுமாகிய  கயந்த கருணாதிலக்க

எட்டாவது இடம்  ஐக்கிய சுதந்திர முன்னணியின் களுத்துரை மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர்   ரோஹித அபேகுணவர்தன ஒன்பதாவது இடம்  மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தேசியப்பட்டியல் பாராளுமன்ற அங்கத்தவர்  பிமல் ரத்னாயக்க பத்தாவது இடம் ஐக்கிய சுதந்திர முன்னணி மாத்தரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்   காஞ்சன விஜேசேகர.
பாராளுமன்ற அங்கத்தவர் தரவரிசைப்படுத்தலில் அனுரகுமாரவுக்கு முதலிடம் முஜீபுர் றஹ்மானுக்கு இரண்டாமிடம் பாராளுமன்ற அங்கத்தவர் தரவரிசைப்படுத்தலில் அனுரகுமாரவுக்கு முதலிடம் முஜீபுர் றஹ்மானுக்கு இரண்டாமிடம் Reviewed by Vanni Express News on 1/09/2019 04:43:00 PM Rating: 5