மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல்களை முதலில் தீர்த்து வைக்க வேண்டும்

தேர்தல் சம்பந்தமாக கருத்துக்களை வௌியிட்டு சிலர் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நளின் பண்டார கூறியுள்ளார். 

நேற்று கேகாலை பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறினார். 

பாராளுமன்ற தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் விருப்பம் மற்றும் தேவைக்கு ஏற்ப மாத்திரமே நடைபெற முடியும் என்று அவர் கூறியுள்ளார். 

பாராளுமன்ற தேர்தல் 2020ம் ஆண்டிலேயே நடைபெற வேண்டும் என்றும், அதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலே நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

அதேநேரம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல்களை முதலில் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் பிரதியமைச்சர் நளின் பண்டார கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல்களை முதலில் தீர்த்து வைக்க வேண்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல்களை முதலில் தீர்த்து வைக்க வேண்டும் Reviewed by Vanni Express News on 1/29/2019 03:55:00 PM Rating: 5