தமிழ் கூட்டமைப்பு எதிர்கட்சியின் பொறுப்பை சரியாக செய்யவில்லை

தமிழ் கூட்டமைப்பு எதிர்கட்சியின் கடமையை சரியாக நிறைவேற்றியிருந்தால் இன்று அவர்களின் கோரிக்கைகளுக்கு தெற்கு செவி சாய்த்திருக்கும் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

நேற்று விஜேராமயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நாட்டின் பொறுப்புவாய்ந்த எதிர்கட்சி பதவி வழங்கப்பட்டிருந்தது.நாட்டில் அனைத்து மக்கள் மீதும் தாக்கம் செலுத்தும் பல்வேறு பிரச்சினைகள் வந்த போதெல்லாம் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய எதிர்கட்சி பொறுப்பை சுமந்த தமிழ் கூட்டமைப்பு ரனில் விக்ரமசிங்கவைவும் அரசாங்கத்தையும் பாதுகாக்கும் நடைமுறையையே  பின்பற்றியது.

தங்களுக்கு கிடைத்த அறிய வாய்ப்பை சரிவர அவர்கள் பயன் படுத்தியிருந்தால் வடக்கில் மாத்திரம் அல்ல முழு நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் மனங்களையும் அவர்களால் வென்றிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை.

இன்று புதிய அரசியலமைப்பிற்கு தெற்கின் ஆதரவை கோரும் அவர்கள் அன்று கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கூட்டமைப்பு எதிர்கட்சியின் பொறுப்பை சரியாக செய்யவில்லை தமிழ் கூட்டமைப்பு எதிர்கட்சியின் பொறுப்பை சரியாக செய்யவில்லை Reviewed by Vanni Express News on 1/23/2019 05:10:00 PM Rating: 5