வடமாகாணத்தின் புதிய ஆளுநர் கடமையேற்பு நிகழ்வில் யாழ் மாநகர முதல்வரும் பங்கேற்பு

-முதல்வரின் ஊடகப் பிரிவு 

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி கௌரவ சுரேன் ராகவன் அவர்கள் இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆளுநர் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் இன்று ஆளுநர் வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவேல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், கௌரவ ஆளுநருக்கு தமது வாழ்த்துக்களையும் கூறியிருந்தார். 

முதல்வர் தனது வாழ்த்துரையில் “தான் வடமாகாணசபையின் உறுப்பினராக இருந்த காலப்பகுதியிலிருந்து 3 ஆளுநர்களின் காலப்பகுதியில் பணியாற்றியிருப்பதாகவும், இறுதியாக இருந்த முன்னாள் ஆளுநர் கௌரவ ரெஜினோல்ட் கூரே அவர்களின் காலத்தில் மாநகரசபை முதல்வராக பல்வேறு வேலைத்திட்டங்களையும், பல தீPர்க்க முடியாத பிரச்சினைகளையும் இனங்கண்டு அதனை தீர்ப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், இன்று அவ் விடயங்களின் தொடர் நடவடிக்கைகளை புதிதாக பொறுப்பேற்றிருக்கின்ற ஆளுநர் அவர்கள் எம்மோடு இணைந்து திறம்பட முன்னெடுக்க வேண்டும் என்றதோடு, அதற்கான ஒத்துழைப்புக்களை நாம் வழங்கத்தயாராக இருக்கின்றோம் என்றார். 

மேலும் எமது மக்கள் எதிர்பார்க்கின்ற வகையில் ஆளுநரது சேவைகள் அமைய இறைவன் துணை செய்ய வேண்டுவதோடு, ஒரு மாநகரத்தின் முதல்வராக  பசுமையான மாநகரத்தை நோக்கி என்ற சிந்தனையோடு களமிறங்கியவர்கள் அதற்காக கடந்த காலங்களில் செயற்பட்டடோம். இனி வரும் காலங்களிலும்  எங்களுடைய இலக்குகளை மக்களுடைய அபிலாசைகளை வென்றெடுக்கக் கூடிய நல்ல சூழலை உருவாக்குவதோடு, மாநகரத்தில் இருக்கக்கூடிய பாரிய இடைவெளிகள், ஆளணி போதாமை, நீண்டகாலமாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்ற சில சிரமங்களாக இருக்கக்கூடிய விடயங்களை கலைந்து நாங்கள் புதிய எண்ணங்கள், சிந்தனைகளோடு இங்கு பதவியேற்றிருக்கின்ற ஆளுநரோடு பயணித்து ஒரு சுத்தமான பசுமை நகரை நாங்கள் எங்களுடைய கட்சிகளினுடைய நிலைப்பாடுகள் கடந்து ஒற்றுமையாக பயணிக்க தயாரக இருக்கின்றோம். 

அதற்கு அவரோடு சேர்ந்து நாங்கள் பயணித்த எங்களுடைய இலக்குகளை வெல்ல எண்ணியிருக்கின்றோம் என்பதை இந்த இடத்திலே பகிர்ந்து இந்த வடக்குமாகாணத்தை பொறுப்பெடுத்து தமது பணியை ஆரம்பித்திருக்கின்ற எங்களுடைய புதிய ஆளுநர் அவர்களை, மனதார வாழ்த்தி அவர்களுடைய இலக்குகள் எண்ணங்களை வெல்ல இறைவன் ஆசி வழங்க பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டிருந்தார். 

இவ் வரவேற்பு நிகழ்வில் வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அவர்கள்,  முன்னால் வடக்குமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அவர்கள், இந்தியத்துணைத்தூதுவர் உயர்திரு பாலச்சந்திரன் அவர்கள், வடக்குமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள், படைகளின் பிரதாணிகள், பொலீஸ் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், ஆளுநர் செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 
வடமாகாணத்தின் புதிய ஆளுநர் கடமையேற்பு நிகழ்வில் யாழ் மாநகர முதல்வரும் பங்கேற்பு வடமாகாணத்தின் புதிய ஆளுநர் கடமையேற்பு நிகழ்வில் யாழ் மாநகர முதல்வரும் பங்கேற்பு Reviewed by Vanni Express News on 1/09/2019 05:00:00 PM Rating: 5