எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்படும்


எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் வாரம் முதல் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என, பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பால்மா இறக்குமதியின் போது கிலோகிராம் ஒன்றுக்காக 170 ரூபா வரியாக செலுத்த வேண்டியுள்ளது.

அந்த வரியினை குறைக்குமாறும் அல்லது பால்மாவின் விலையில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறும், நுகர்வோர் அதிகார சபைக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக, கடந்த வாரங்களில் பால்மா இறக்குமதி கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், எதிர்வரும் வாரங்களில் பால்மா இறக்குமதியை முழுமையாக நிறுத்தவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதிநிதி லக்ஸ்மன் வீரசூரிய எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் Reviewed by Vanni Express News on 1/19/2019 04:54:00 PM Rating: 5